எம்.சி.ஏ.,வுக்கு மட்டுமே பொதுவாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. என்றாலும் புகழ் பெற்ற கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த முறையும் ஆண்டுக்காண்டு மாறி வருகிறது. எனவே நீங்கள் இதை கவனித்து வருவது முக்கியம். பொதுவாக கம்ப்யூட்டர் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் கணிதம், ரீசனிங், கம்ப்யூட்டர் திறன் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் உங்களது திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன.